Tuesday, 19 April 2011
பாவம் - A short story by Cranky boy
இதுக்குதான் வேண்டாம்னு சொன்னேன் அப்பவே என்றான் ரவி சுற்றும் முற்றும் பார்த்தபடியே .
shhhh என்றான் வசந்த். கொஞ்சம் வாயே மூடுங்கடா. எல்லாரும் சேர்ந்து தானே பண்ணோம் . இப்போ நடக்கறதே பேசு.
சுப்பிரமணி வரதுக்குள்ளே முடிச்சிடனும் என்றான் அஷ்வின் கண்களில் மிரட்சியுடன் .
அவன் வீட்லே இல்லாத நேரத்திலே அவன் தங்கச்சி சுசிலா தனியா இருந்தப்போ நாம இப்படி பண்ணி இருக்க கூடாதுடா என்ற ரவியை முறைதான் வசந்த்.
நீ வேணும்னா கிளம்பு. சும்மா தொணதொனகாதே என்ற வசந்தின் குரலில் உஷ்ணம் ஏறி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. மௌனம் சிறிது நேரம் அனைவரையும் ஆக்கிரமித்தது.
" ஏய் செருப்பு சத்தம் கேட்குது " யாரோ வராங்க என்றான் ரவி பதட்டமாய் .
சுப்பு தான் டா!!!! சீக்கிரம் டா என்றான் அஷ்வின் . அவன் கைகள் நடுங்குவதை தடுக்க சிரம பட்டான்.
சட்டென்று பொட்டலமாக கட்டிய அதை மொட்டை மாடியின் பின்புறம் விசிறி அடிபதற்கும் , சுப்பு மாடி ஏறி வருவதற்கும் சரியாக இருந்தது.
"என்னடா பண்றீங்க மாப்ளை. உங்க மூஞ்சி எல்லாம் பேஸ்ட் அடிச்சா மாதிரி இருக்கு " என்றான் சுப்பு . முகத்தில் கேள்விகுறி இருந்தது.
ஒன்னும் இல்லடா மச்சான். குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வர்றியா தாகமா இருக்கு என்றான் வசந்த் முகத்தை கை குட்டையால் துடைத்தபடியே
அதுக்கு ஏன்டா வெயிட் பண்ணினீங்க சுசிலா கிட்டே கேட்க வேண்டியது தானே என்றபடியே " சுசிலா சுசிலா என்று குப்பிட்டான். கழுதை பதிலே சொல்ல மாட்டா . இருங்கடா நானே பொய் எடுத்துனு வர்றேன் என்று படி இறங்கி சென்றான் .
"அப்பாடி. நல்ல வேளை அவன் பாக்குறதுகுள்ளே dispose பண்ணே . இருந்தாலும் உனக்கு ரொம்ப திமிரு டா. சுப்பி iyer னு தெரிஞ்சு கூட அவன் வீட்டிற்கு படிக்க வரும்போது சிக்கன் பகோடா வாங்கினு வந்து அவன் இல்லாதப்போ சாபிட்றது எவ்ளோ தப்பு தெரியுமா? அவன் பார்த்தா இதோட நம்மாலே வீடு பக்கமே சேர்க்க மாடன் இன்னொரு வாட்டி இப்படி பண்ணாதே டா வசந்த் என்றான் ரவி பயம் நீங்கியவனாய் .
அதுலதான் மச்சி த்ரில்லே இருக்கு. நீங்களும் தானே சரிபங்கு சாப்டீங்க. அப்புறோம் ஏனடா எனக்கு அட்வைஸ் பண்றீங்க மூடிட்டு படிங்கடா என்றான் வசந்த் பெருமூச்சுடன் .
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
hmmm evalothana? nankooda periya twist ethir parthu enalamo karpanai paninen... kadasi varaikum suseela pathi solave illiye? avalukum konjam bakoda koduthu erukalam....
சாரி பாஸ். நம்ம கதையிலே நீங்க எதிர்பார்க்குற சமாசாரம் எல்லாம் கிடைக்காது. !!!!!
i suspected it to b a chappa matter...but ur way of writing and the suspense u maintained was great...
Post a Comment