அம்புலிமாமா சங்க வரலாறு . ( சத்தியமாக போர் அடிக்காது என்று மாரியாத்தா மேல் சத்தியம் செய்யப்பட்டது ).

Wednesday, 20 April 2011

காபி ஷாட்டு அரலாம் வாங்கோ ( காபி சாப்பிட்டு வரலாம் ) என்றார் பார்கவி ஒரு சோம்பலான மதிய நேரத்தில் . தூக்கம் கண்ணை சுற்றியதாலோ என்னவோ பின்னர் வரகூடிய விபரீதங்கள் குறித்து சற்றும் அறியாதவனாய் உடனே சென்றேன் .

4 X 4 அளவே இருக்க கூடிய , காபி குடித்து கை கழுவும் வசதி மட்டும் இருக்க கூடிய சிறிய pantry' ல் வசந்தும் , அனாமிகாவும் கையில் சூப்பும், வாயில் சிரிப்புமாய் வரவேற்றனர்.

"lets start a sangam for ourselves " என்று ஆரம்பித்தான் வசந்த். சில பல Flashbacks ஏன் கண்களில் மின்னி மறைந்தது . அதாகப்பட்டது , வசந்த் அவ்வபோது " இந்திரா சௌந்தரராஜன் " எழுதிய கன்னி தீவு மற்றும் தொட தொட தங்கம் போன்ற சில்பான்சி கில்பான்சி கதை புத்தகங்களை கொடு வந்து விநியோகித்து கொண்டு இருப்பான் . அப்போது எல்லாம் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை காரணம், இந்திரா சௌந்தேர்ராஜன் புத்தகங்கள் எல்லாம் படிப்பதை விட்டு வருடங்கள் பல ஆகி இருந்தது . அதில் இருந்து சற்று விலகி சீரியஸ் எழுத்துகள் துவங்கி சாரு . எஸ் .ரா , ஜெயமோகன் , சுந்தர ராமசாமி, மனுஷியபுத்திரன் என்று மண்டை குழம்பி , மோட்டுவளை முறைத்து பார்க்க துவங்கி , தூக்கத்தை தொலைத்து ஒரு வழியாய் படிப்பதையே சில காலம் தள்ளி வைத்திருதேன் .

இவ்வாறு எல்லாம் நான் யோசித்து முடிபதற்கும் , வசந்த் இங்கிலீஷ் ல் பலவாறு பேசி முடிபதற்கும் , அனாமிகா ஒரேடியாக சிரித்து முடிபதற்கும் , யாரோ ஒருவர் கை கழுவி முடிபதற்கும் சரியாக இருந்தது. ( அது கை கழுவும் இடம் என்று மறுபடியும் நினை படுத்துகிறேன் ).

சிரிப்பும் , பேச்சும், சிந்தனையும் (மொக்க தனமான சிந்தனை தான் பாஸ்) ஒரு மணி நேரமாக கழிந்தது. ஒரு வழியாக ஐடியா பிறந்தது. அது தான் இந்த அம்புலிமாமா சங்கம் !!!!!!

சரி சங்கம் ஒரு சிங்கமாக பிறந்து விட்டது. பெயரும் வைத்து ஆகி விட்டது . இனி என்ன செய்வது என்று யோசித்தோம் . " யோசித்தோம் யோசித்தோம் நாள் முழுக்க யோசித்தோம் , வீடு செல்லும் வரை யோசித்தோம், வீட்டுக்கு சென்று யோசித்தோம் , சாப்பிடும்போது யோசித்தோம் தூங்கும் போது யோசித்தோம் , ரூம் போட்டு யோசிக்க வசதியும் சங்கத்தில் நிதியும் இல்லாத காரணத்தால் பாத் ரூமிலேய யோசித்தோம் .

Pantry'ல் சிப்ஸ் , வேர்கடலை,குட் டே கூகீஸ், பட்டர் பிஸ்கட் , காபி , டீ, வீவா, கார முறுக்கு , பாதாம் பால் என்று அயிட்டங்கள் டேபிளில் குவிந்த அளவிற்கு ஐடியா கள் குவியவில்லை என்பது என்னமோ நிஜம் தான்.

ஒரு வழியாக கிட்டத்தட்ட ஐநூறு ருபாய் செலவு அழித்த பிறகு ஒரு தொடர் கதை தொடங்கி சங்க மெம்பர்கள் நால்வரும் ஒரு பகுதி எழுதுவது என்று முடிவு செய்தோம்.

இது சங்கம் பிறந்த வரலாறு.

இனி வருவது, நாங்கள் எழுதிய முதல் கதை , ஒருவர் விட்ட இடத்தில இருந்து வால் பிடித்து எழுதுவதற்குள் குரங்கு கையில் அகப்பட்ட மாலையாய் ஆன கதை . கதையை ஒரு வழியாய் முடித்து தொலைப்பதற்கு நாங்கள் பட்ட அவஸ்தை, குருரமாக நாங்கள் யோசித்த கொலைகள் , கெக்கே பிக்கே என்று சிரித்த சிரிப்பு இவை அனைத்தும் அடுத்த பகுதியில் ( இந்த பகுதிக்கு எதிர்ப்பு வராமல் இருந்தால் ) இன்னும் சுவாரசியமாக , விவரமாக , இன்னும் காமெடி யாக தர முயற்சி செய்தபடி இப்போதைக்கு இந்த கட்டுரையை முடிக்கும் ---------------

உங்கள்

கணேஷ் என்கிற cranky boy.

பின்குறிப்பு : இந்த கட்டுரை யாரையும் மனதையும் புண் படுதுவதர்கள்ள . மீறி புண்பட்டால் உடனே டாக்டரை அணுகவும். மருந்து செலவுகளுக்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது .

3 comments:

Anonymous said...

நடந்ததை நடந்த படியே எழுதியதற்கு நன்றி. சூப்பர் டா ...
உனக்கு இந்த ஸ்டைல் நல்லா வருது. அப்படியே தொடர்ந்து எழுது
ஆனால் எனக்கு மட்டும் பகோடா தின்னும் ரோல் இல்லாமல்
வேறு உருப்படியான கரெகடர் கொடு

Anne said...

ha ha...tat was awesome....

Anne said...

Keep it coming....

Post a Comment