டோனி இந்தியன் பிளேயர் ரா? ( ஒரு சோக சம்பவம் ).

Monday, 25 April 2011

இதை எழுத கூடாது என்று தான் முதலில் நினைத்திருந்தேன். எனக்கு ஏற்பட்ட சோகம் என்னோடு போகட்டும் என்று.

ஆனால் விதி யாரை விட்டது ? உங்களையும் கொஞ்சம் பிடித்து உளுகட்டுமே . ஆகவே இதை பதிவு செய்து என் சோகத்தை உங்களோடு பகிர்கிறேன் .

16 april அன்று வெளியே சென்று விட்டு வந்த நான் வீடு பூட்டி இருந்தது கண்டு எதிர் வீட்டில் சாவி வாங்கலாம் என்று கதவை தட்டினேன். விதி அப்போது உரக்க சிரித்து என் முதுகில் தட்டியதை அறியாமல் !!!!!

கதவை திறந்த வெங்கடராம தாத்தா புன்சிரிப்போடு குசலம் விசாரித்தார் . கடும் வெயிலில் வந்ததால் அவரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அவருடைய அனைத்து கேள்விகளுக்கும் சிரித்து மழுப்பி " மாமா சாவி கொடுங்கள்" என்றேன் .

" சாவியா?" என்றார் வெற்றிலை கறை பற்களோடும் , சோடா புட்டி கண்ணாடியில் ஆச்சர்யமாய் ? கொடுத்து போகலியே மாமி .

எரிச்சலோடு அம்மாவை அலைபேசியில் அழைத்தேன் . கடைக்கு வந்திருக்கேன் .ஒரு பத்து நிமிசத்துலே வந்திடறேன் என்றார் அம்மா .

சரி அதுவரை என்ன செய்யலாம் என்று யோசிபதற்குள் , என்ன ஏது என்று கேட்டு கொண்ட மாமா, " நம்ம ஆத்துலே உக்காருங்கோ " என்றார் அன்புடன்.

வெயிலுக்கு பயந்து உள்ளே சென்றது . சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதை ஆயிற்று .

டிவி யில் அன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் மேட்ச் நடந்து கொண்டிருந்தது . " மேட்ச் பார் பேளா" என்றார் மாமா . " இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காது . ம்ம்ம்ம் என்றேன்.

நானும் பார்ப்பேன் ரொம்ப இன்ட்ரெஸ்ட் என்றார். போன வாரம் வேர்ல்ட் கப் செம ஜோரு. விடிய விடிய பார்த்தேன் என்றார்.

ஆஹா இந்த வயதிலும் ( வயது ஜஸ்ட் 73 தான் )இப்படி ஒரு கிரிக்கெட் இண்டரெஸ்ட் . சூப்பர் என்று நினைத்து முடிபதற்குள் வந்து விழுந்தது முதல் குண்டு .

" பாவம் அன்னைக்கு கவாஸ்கர் தான் உடனே அவுட் ஆயிட்டாரு என்றார் சிரித்த முகத்துடன் . என்ன கொடுமையடா இது. மனிதர் 83 ல் நடந்த வேர்ல்ட் கப்பை தான் கடைசியாக பார்த்து தொலைத்தார் போல என்று நினைத்து கொண்டு " அது சேவாக் என்றேன் .

முகத்தை அஷ்ட கோணலாக சுழித்து மேல் நோக்கி பார்த்தார் ( யோசிக்கிறாராம்!!!). ஆங் ஆமா ஆமா என்றார்.

இத்தோட அடுத்த வேர்ல்ட் கப் 1916 ல் தானே என்றார் வாயில் வெற்றிலையை சாவகாசமாக மென்று கொண்டே.

வெறுத்து போனேன் என்று சொன்னால் அது மிக குறைவே . வேறு எந்த வார்த்தையும் (கெட்ட வார்த்தைகளை தவிர்த்து) நான் அடைந்த உணர்சிகளை சொல்லிவிட முடியாது. முதலாவது வேர்ல்ட் கப் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தல் என்று நினைத்து விட்டார். அதாவது பரவாயில்லை அதை கூட ஒரு நூறு வருடங்கள் முன்னோக்கி கொண்டு சென்று விட்டார் . அதாவது அவர் இன்னும் இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழையவே இல்லை மனரீதியாக .

இந்த முறை மெளனமாக இருந்தேன். இவரிடம் புரியவைத்து தொலைத்து தான் என்ன ஆகிவிட போகிறது. இன்றைக்கு காலையில் யார் முகத்தில் விழித்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன் .

இவ்வாறு அவர் மானாவாரியாக பேசி கொண்டு இருந்த நேரத்தில் , ரைனா அவுட் ஆகிவிட டோனி பாட்டிங் செய்ய வந்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி என்னை உடனடியாக இடத்தை காலி பண்ண வைத்தது. " ஒரு சின்ன வேலை இருக்குது மாமா . நல்லவேளை இப்போதான் ஞாபகம் வந்தது நான் வரேன் மாமா என்று சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் பின்னங்கால் புடரியில் அடிக்க ஓடி வந்தேன் இதற்கு வெய்யிலில் நிற்பது எவ்வளோவோ பரவயில்லை என்று நினைத்து கொண்டே .

அப்படி அவர் கேட்ட கேள்வி " இந்த டோனி இந்தியன் பிளேயர் தானே ? " !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1 comments:

Anonymous said...

dai unmaya sollu.. andha thatha ku ethana pethi? illaina nee avar tolerate oani avar veetuku poi eruka matta... he hehe anyways its nice.. endha madhiri thathaku ellam periya shamadhiya kattanum

Post a Comment