Thursday, 5 May 2011
இந்த தலைப்பு எனக்கு தோன்றியது நேற்று என் மனைவியுடன் அலைபேசியில் பேசியவுடன் நேர்ந்த உரையாடலும் அதன் பிறகு தோன்றிய சிந்தனைகளும் தான் காரணம்.
மனைவியிடம் பேசியபின் ," மனைவியிடம் ரொம்ப பயமா ? " என்றார் என்னுடைய கம்பெனி இன் recruitment partner மற்றும் இன்னொரு ப்ளாகின் (http://viji-poetrymypassion.blogspot.com ) ஓனரும் ஆன விஜி. ( இவரின் ப்ளாக் நம் ப்ளாகை விட சற்று நன்றாக இருப்பதாக நினைக்கிறன் . ஆங்கிலத்தில் எழுதுகிறார் . எனக்கும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று அசை தான் . ஆனால் பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஆங்கிலம் சரியாக படிக்கவே வராது . இந்த லட்சணத்தில் எழுதுவதாவது ???? Never. சரி.... விஷயத்திற்கு வருகிறேன் .
மனைவியிடம் பயமில்லை ஆனால் மனைவியின் சொற்களுக்கு அப்படியே கீழ்படியும் அடிமைத்தனத்தின் சுதந்திரத்தை , அந்த சந்தோஷத்தை ஒரு போதும் இழக்கவோ , விட்டு தரவோ விரும்பாதவன் என்று சுற்றி வளைத்து சொல்வதற்குள் , " மரியாதையா " என்று அவரே கேட்டு ஏன் மானத்தை காப்பாற்றினார் .
ஹீ ஹீ என்று சிரித்து வைத்து ஒரு வழியாக சமாளித்தேன் . ஆனால் அந்த கேள்வி நான் வீட்டுக்கு செல்லும் வழி எல்லாம் என்னை குடைந்து கொண்டு இருந்தது.
உண்மையிலேயே பயபடுகிறேனா என்ன என்று எனக்குள் கேட்டு கொண்டதில் , ஒரு தீர்மானமான முடிவிற்கு வர இயலவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடக்கும் சில பொதுவான விஷயங்களில் , முக்கியமான முடிவுகள் அனைத்தும் நான் தான் இன்றும் எடுக்கிறேன் என்பதாகவே படுகிறது . இருந்தும் மற்றவர் கருத்து கேட்டால் ஒரு வேளை குழப்பம் தீரலாம் என்பதால் எங்களுக்குள் நடக்கும் சில சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன் . படித்து விட்டு நான் சரியாக கணிக்கிறேனா என்று சொல்லுங்கள் ப்ளீஸ் .
சம்பவம் ஒன்று : மாதம் ஒன்றாம் தேதி ஆனால் " எங்கே சம்பளம் ? எடுத்து வை என் கையில் என்பாள் மனைவி . அதை உடனே கொடுக்க வேண்டுமா அல்லது அரை மணி நேரம் கழித்து கொடுக்கலாமா என்று நானே தான் சுயமாக முடிவு செய்கிறேன் . இதில் என் மனைவி ஒருபோதும் தலையிடுவதில்லை .
சம்பவம் இரண்டு : இன்னைக்கு உங்களுக்கு டிபன் இல்லை . வெளியே சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று மாதத்தில் 29 நாட்கள் சொல்லுவாள். ஏன் என்று கேட்க தான் எனக்கு உரிமை மறுக்க பட்டிருகிறதே தவிர , எந்த hotel ல் சாப்பிடலாம் என்று நான் தான் முடிவு செய்கிறேன் இன்று வரை .
சம்பவம் மூன்று : இன்னைக்கு GRT ல வளையல் வாங்கலாம்னு இருக்கேன் . நீங்க வந்து காசு கொடுத்துடுங்க என்பாள் டிவி யில் வரும் தொகுப்பாளினி போல் சிரித்து கொண்டே . காசை நான் கிரெடிட் கார்டில் கட்டலாமா அல்லது உண்டியை உடைத்து கட்டலாமா அல்லது பர்சை நோண்டி கட்டலாமா அல்லது கிட்னியை விற்று கட்டலாமா என்று முடிவெடுக்கும் பூரண சுதந்திரத்தை ஏன் மனைவி எனக்கு கொடுத்து இருக்கிறாள் என்பதை நான் தைரியமாக , பெருமிதத்தோடு யார் முன்னிலையிலும் சொல்வேன் .
சம்பவம் நான்கு : " நீங்க என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ தெரியாது இந்த சனிகிழமை நாம அந்த புது படத்திற்கு போறோம் . ticket வாங்கிடுங்க என்பாள் திடீரென்று . (பெரும்பாலும் அந்த படங்கள் அனைத்து theatre களிலும் புல் ஆகி இருக்கும் . படத்தின் பெயர் வாரா வாரம் மாறும் . ஆனால் இந்த நடைமுறை மாறாது. ) அது சத்யமா, மாயஜாலா , ஐநாக்சா என்று நான் எடுக்கும் முடிவில் என் மனைவி பெருந்தன்மையோடு உடன்படுவாள் . அது போக ஆட்டோ வில் செல்வதா , பைக்கில் செல்வதா போன்ற பெரிய உபரி முடிவுகளும் நான் தான் எடுப்பேன் .
இப்போது சொல்லுங்க . பெரிய முடிவு எல்லாம் எடுப்பது நான்தான் . அப்போ அவ தானே எனக்கு பயப்படுறா ??????
பின் குறிப்பு : இந்த கட்டுரையை எழுதி கொண்டு இருந்ததில் நேரம் செல்வது தெரியாமல் இருந்து விட்டேன் . போன் செய்து மனைவி காச் மூச் என்று கத்தி, உடனே வீட்டிற்கு வருமாறு உத்தரவு போட்டு இருக்கிறாள் . ஆனால் இப்போது கூட அவளிடம் எப்படி வழிந்து சமாளிக்கலாம் என்று நான் தான் முடிவு செய்கிறேன் . :-)
A short and true story by Ganesh alias Cranky boy
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Sabbaa....ippavae kanna katuthae....
அம்பி,
இதவிட அழகா ஒரு பையன் பொலம்ப முடியாது.
இப்படித்தான் இன்றைக்கு எல்லா ஆண்களும் வீட்டில் இதே மாதிரி
பெரிய பெரிய முடிவுகள் எடுக்கும் திறமைசாலிகளாய் இருக்கிறார்கள்
நீ மட்டும் விதிவிலக்கா என்ன?
shoopera eruku da ambi
ha ha... kandipa kandipa... you are the winner :)
Hee hee..Feel pity for you Ambi..
Post a Comment