கரையோர சுவடுகள்

Friday, 8 April 2011

கரையோரம் கால்கள் நனையும் நேரம் 
நினைவலைகளால் நனைந்திடும் நெஞ்சம் 
கடற்கரை - இது
கல்லூரி நாட்களில் பல நாள் இதுவே வகுப்பறை 
பதிந்து புதைந்த மணலில் சுவடுகள்
வந்து சென்றதற்கு நாங்கள் வைத்த கையொப்பம்  
சுற்றுமுற்றும் பார்க்காமல் சிரித்த நிமிடங்கள்
மனமுடைந்து நாங்கள் சோர்வு கொண்ட போதும் 
அலையின் தாலாட்டில் ஆறுதல் கொண்ட தருணங்கள் 
இப்படி  எத்தனையோ உணர்வுகள் 
அத்தனையும் எங்கள் உள்ளஓரமாய் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் 
நன்றாய் ஞாபகம் இருக்கிறது 
கரையோரம் காலாற நடந்த அந்த அந்தி நேரம் 
உன் வீட்டு கதையும் என் வீட்டு கதையும் பேசி முடித்து 
கிளம்பி செல்ல நாம் நினைத்த பொழுதில்தான் 
முழுமதி கிரணங்கள் வெள்ளி அலைகளில் இந்த்ரஜாலம் காட்டின 
அதை ரசித்தே நம் கதைகளை தொடர்ந்து பேசிய இரவு
உயிரில் கலந்து செவிகளில் இன்னுமும் ஒலிக்கிறது
இன்று நிற்கிறேன் தனிமையில்
ஐந்து சுவடுகளில் ஒன்றை மட்டும் பதித்தபடி 
சிரிப்புஒலிகள் கேட்கிறது தூரத்தில் தேயிந்தபடி 
மாயை ஆனாலும் அது மனதை தொலைத்த நிமிடங்கள் 
திசைக்கு ஒருவராய் நாங்கள்தான் சென்றுவிட்டோம் 
அலைகள் இன்னமும் துளளியபடியே இருக்கின்றன
வேறு ஐந்து பாதங்களை வருடியபடி .............................

3 comments:

Anne said...

Wonderful....

Unknown said...

Good one Vasanth..

Viji said...

awesome :) well done well done Vasanth...

Post a Comment