வெயில்,இரவு,நிலவு.............

Sunday, 29 May 2011

பகலெல்லாம் விளையாட வெயில் வேண்டும்
பட்ட மணல் சூட்டை போக்க ஓர் இரவு வேண்டும்
வேர்வை சிந்த உழைக்க வெயில் வேண்டும்
களைப்புகள் இளைப்பாற ஓர் இரவு வேண்டும்
பாடுபடும் நேரமெல்லாம் வெயில் வேண்டும்
பட்ட கஷ்டம் சொல்லி அழ இரவு வேண்டும்
உன் கைபிடித்து நடந்து செல்ல வெயில் வேண்டும் 
சென்ற கதை பேசிமுடிக்க  இரவு வேண்டும் 
உன்னை பார்த்த நாளை 
எண்ணி  பார்க்க இரவு வேண்டும் 
என் தனிமைக்கு துணையாக நிலவு  வேண்டும் 
கனவுக்குள்  வாழ்ந்திட  ஓர் இரவு வேண்டும் 
நான் பார்த்து உறங்க 
உன் முகம் கொண்ட நிலவு வேண்டும்
இரவும் நிலவும் தாலாட்டி முடித்தாலும்
தட்டி எழுப்ப காலையில் வெயில் வேண்டும் !!!

5 comments:

Unknown said...

Sooperb... You have got a very creative mind!

Punitha Nagarajan said...

Ur concept is so good da..clubbing day & night together with an awesome flow of feelings:)

anu said...

உண்மைத்தமிழனின் உளறல் - Wonderful Erravu with Neela! Very interesting!

Crankyboy said...

nice one. expecting many more

Anne said...

Wow...great

Post a Comment