ஆசிரியர் தினத்தன்று
உனக்குதான் முதல் வாழ்த்து
எனக்கு ,
காதலையே கற்றுத்தந்தவள் ஆயிற்றே !!!
காதல் வந்ததும்
நீ அழகானாய்
அனால்,
நான்தான் முட்டாள் ஆகிவிட்டேன் !!!
கைகளுக்கு கோலம் போட
கற்றுகொண்டாய்
கால்களுக்கு எப்பொழுது
சொல்லிகொடுத்தாய் ???
தேடினேன்
கரையோரமாய் உன் கால்சுவடை
காணவில்லை
ஆம் உண்மைதான்
தேவதையின் தடங்கள் பதிவதில்லைதான் !!!
வாய் விட்டு சிரித்தால்
நோய் விடு போகுமா
யார் சொன்னது?
நீ சிரித்ததால்
எனக்கு வந்த நோய்தானடி - காதல் ***
காகித பூ நான்
அனால் உன் கையில் மட்டும்
வாசம் வீசுவேன் !!!
மறந்தும் நீ என்னை நினைக்கவில்லை
நானோ உன்னையே நினைக்கிறன்
மறக்கமுடியாமல் !!!
காய்ச்சல் எப்படி வந்தது
என்று கேட்கிறாய்
நிலவுபெண் நீ என்னை
தினமும் தொட்டுவிட்டு !!!
நீ என் வாழ்வில் வந்தாய்
என்று யார் சொன்னது ?
நீ வந்தபின் தானடி
எனக்கு வாழ்வே !!!
கனவுலகில் உன்னை
பார்த்த நொடி முதல்தான்
என் உலகமே கனவாகி போனது!!!
2 comments:
Wow...
I loved this para.
நீ என் வாழ்வில் வந்தாய்
என்று யார் சொன்னது ?
நீ வந்தபின் தானடி
எனக்கு வாழ்வே !!!
Awesome thinking Vasanth.
Wonderful... Marvelous...
Post a Comment